செங்கடலைப் பிளந்து
sengadalaip pilandhu
செங்கடலைப் பிளந்து என்னை நடக்கச் செய்வீர் சிங்கத்தின் கேபியிலும் பிழைக்கச் செய்வீர் செங்கடலைப் பிளந்து என்னை நடத்திடுவீர் சிங்கத்தின் கேபியிலும் பிழைக்கச் செய்வீர் அல்லேலூயா பேரன்பு கொண்டவரே அல்லேலூயா மாறாத நேசரே
1. காற்றும் கடலும் உம் வார்த்தைக் கேட்டு அடங்கும் வறண்ட நிலம் உம்மை துதித்துப் பாடிடும் அசைவாடும் இடமெல்லாம் – நீர் உம் ஆசீர் உண்டாகும் நீர் சொன்னால் போதுமே உம் தயவு என்னை தாங்கிடும்-2
பல்லவி
அல்லேலூயா பேரன்பு கொண்டவரே அல்லேலூயா மாறாத நேசரே
2. உலர்ந்த எலும்புகள் உயிர் பெற்று எழும்பும் பெரிய சேனையாய் ஆயத்தமாகும் ஆவியானவரே என்னை – ஓ நிரப்புமே இயேசுவே ஒரு வார்த்தைச் சொல்லுமே பலத்த சேனையாய் மாறுவேன்-2
பல்லவி
அல்லேலூயா பேரன்பு கொண்டவரே அல்லேலூயா மாறாத நேசரே
3. தேவ ராஜ்யத்தை ஒன்று சேர்ந்து கட்டுவோம் தடுக்கும் எரிகோவை முற்றுகை போடுவோம் துதியிலும் ஜெபத்திலும் நீர் அக்கினியாய் வாருமே மகிமையின் மேகமாய் நீர் என்னை மூடுமே -2
பல்லவி
அல்லேலூயா பேரன்பு கொண்டவரே அல்லேலூயா மாறாத நேசரே