செங்கடலை பிளந்த தேவன்
sengadalai pilandha devan
செங்கடலை பிளந்த தேவன் என்னோடு இருக்கிறார் நான் யாருக்கும் பயப்படேனே எரிகோவை தகர்த்த தேவன் என் கூட இருக்கிறார் நான் யாருக்கும் அஞ்சிடேனே-2
ஓசன்னா ஓசன்னா என்று பாடுவேன் என் தேவனுக்கு மகிமையை செலுத்திடுவேன் ஓசன்னா ஓசன்னா என்று பாடுவேன் என் தேவனுக்குள் மகிழ்ந்து களிகூறுவேன்-2
1.மாராவின் நீரை மதுரமாய் மாற்றிய என் நேசர் என்றும் என்னோடுண்டு-2 இஸ்ரவேலின் தாகத்தை தீர்த்திட்டவர் இன்று உன் தாகம் தீர்க்க வல்லவரே-2-ஓசன்னா
2.மரித்த லாசருவை உயிர்த்திட்ட தேவன் இன்றும் என்றும் நம்மோடுண்டு-2 லாசருவை உயிர்ப்பித்த தேவன் அவர் இன்று உன்னையும் உயிர்ப்பிக்க வல்லவரே-2-ஓசன்னா