செந்தமிழில் உந்தன் புகழ் எழுதி
sendhamizhil undhan pugazh ezhudhi
செந்தமிழில் உந்தன் புகழ் எழுதி - நான் பாடிடுவேன் இறைவா என் சிந்தனையில் நீ இருந்து வாழ எழுந்தருள்வாய் தலைவா - என்னில் ! எழுந்தருள்வாய் தலைவா
உன் உடல் உயிர்த்ததும் வல்லமையால் உலகினர் உயிர்ப்பதுன் வல்லமையால் ( 2 ) என்னுடல் உயிருடன் வாழ்ந்திடவே - 2 இறைமகனே இன்று எழுந்தருள்வாய் - 2 2 .
உன்னுயிர்த் தியாகம் புரிந்ததனால் மண்ணுயிர் தினமும் மகிழ்கின்றது ( 2 ) என்னுயிர் மெழுகாய்க் கரைவதனால் - 2 என்னுயிர் காத்திட எழுந்தருள்வாய்