சேனையின் கர்த்தா
senaiyin karthaa
1. சேனையின் கர்த்தா ! சீர் நிறை யேகோவா ! உம வாசஸ்தலங்களே எத்தனை இன்பம் ! கர்த்தனே என்றும் அவற்றை வாஞ்சித்திருப்பேன் .
2. ராஜாதி ராஜா ! சேனைகளின் கர்த்தா! உம பீடம் என் வாஞ்சையே உம வீடடைந்தே உம்மைத் துதித்தே உறைவோர் பாக்யவான்களே .
3. சேனையின் கர்த்தா! சீர் பெருகும் நாதா ! எம் கேடயமானோரே ! விண்ணப்பம் கேளும் கண்ணோக்கிப் பாரும். எண்ணெய் வார்த்த உம் தாசனை .
4. மன்னா நீர் சூர்யன் என் நற்கேடயமும் ; மகிமை கிருபை ஈவீர்; உம் பக்தர் பேறு நன்மை அநந்தம் உம்மை நம்புவோன் பாக்யவான்.
5. திரியேக தேவே; மகிமை உமக்கே வளமாய் உண்டாகவே ! நித்தியம் ஆளும், சதா காலமும் உலா தாம்படியே ஆமேன் . ஆமேன்