சேனைகளின் கர்த்தாவே உம் வாசஸ்தலங்கள்
senaigalin karthaavae um vaasasthalangal
சேனைகளின் கர்த்தாவே உம் வாசஸ்தலங்கள் எத்தனை இன்பமும் மேன்மையானவை - 2 என் மணவாளரே என் துணையாளரே நீர் வருகின்ற நாள் எப்போதோ - 2
அழியாத மாளிகையாய் பரிசுத்த அலங்காரமாய் பளிங்கு ஜொலிக்கும் அந்த நதியோரத்தில் நான் கால் வைக்கும் நாள் எப்போதோ - 2
மத்திய வானமதில் நேசரின் கரம் காணவே - 2 அழைக்கின்ற குரல் கேட்டு விரைந்திடுவேன் என்னை அழைக்கின்ற நாள் எப்போதோ - 2
சாரோனின் ரோஜாவல்லோ பதினாயிரங்களில் சிறந்தோர் - 2 சூரியன் போல் ஜொலிக்கும் உம்முகத்தை நான் தரிசிக்கும் நாள் எப்போதோ - 2
ஆனந்த சங்கீதங்கள் வலுவாக தொனித்திடவே - 2 ஆணிகள் பாய்ந்திட்ட உம்பாதத்தை நான் நனைக்கின்ற நாள் எப்போதோ - 2