சேனைகளின் தேவனை
senaigalin devanai
சேனைகளின் தேவனை சிங்காரமாய் பாடுவோம் செங் குருதி சிந்தி நன்மை மீட்டவரை பாடுவோம் பாடுவோம் ராகதேவன் இயேசுவை பாடுவோம் பாடுவோம் பாவேந்தன் இயேசுவை பாடுவோம்
1. ஒருவராய் பெரிய அதிசயம் செய்யும் ஆண்டவர் இயேசுவை பாடுவோம் ஒன்றும் இல்லாமல் உலகத்தை படைத்த உன்னதர் இயேசுவை பாடுவோம்
2. சூரியனை ஒரு நாள் மறைய விடாமல் இறுத்திய இயேசுவை பாடுவோம் இடியோசைக்கும் மின்னல் மழைகளுக்கும் வழி சொல்லும் இயேசுவை பாடுவோம்
3. எவருமே பூட்டை கூடாதபடிக்கு திறக்கிற தேவனை பாடுவோம் ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்கு பூட்டுகிற வேந்தனை பாடுவோம்