சேனைகளின் தேவன் நம்மோடு
senaigalin devan nammodu
சேனைகளின் தேவன் நம்மோடு இருக்கின்றார் நல்லவர் அவர் வல்லவர் அடைக்கலமானவர்
எரிகோ போன்ற சோதனைகள் எதிரிட்டு வந்தாலும் தகர்த்திடுவார் நொறுக்கிடுவார் ஜெயத்தைத் தந்திடுவார்
சேனையின் கர்த்தரை நம்பிடுவாய் பாக்கியம் அடைந்திடுவாய் உயர்த்திடுவார் தாங்கிடுவார் நன்மையால் நிரப்பிடுவார்
ஆவியின் வரத்தை தந்திடுவார் ஆவியை பொழிந்திடுவார் விரைந்திடுவாய் எழும்பிடுவாய் சீயோனில் சேர்ந்திடுவாய்
சபையோரே நாம் எழும்பிடுவோம் வசனத்தைப் பிடித்திடுவோம் வென்றிடுவோம் சென்றிடுவோம் ஊழியம் செய்திடுவோம்
எதிர்ப்பு ஏளனம் பெருகினாலும் ஜெயகர்த்தர் நமக்குண்டு ஜெயம் தருவார் ஜெயித்திடுவோம் ஜெயம் பெற்று வாழ்ந்திடுவோம்
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F F Bb C Dm Gm C F F Bb C F Bb Am Dm Gm C F F Bb C F Bb Am Dm Gm C F F Bb C F Bb Am Dm Gm C F F Bb C F Bb Am Dm Gm C F