செம்மறியின் விருந்துக்கு
semmariyin virundhukku
செம்மறியின் விருந்துக்கு அழைக்கப்பட்டோர் பேறுபெற்றோர் அவ்விருந்தை உண்டிட சென்றிடுவோம் இன்பம் பொங்க ( 2 )
இறைவன் தரும் விருந்திது அதை உண்ணத் தடையென்ன உறைய வரும் இறைவனை நாம் ஏற்கத் தடையென்ன ( 2 ) உள்ளக் கதவு திறந்தது அதன் உள்ளே வாழுவாய் உவகை என்னும் ஒளி கொணர்ந்து என்னை ஆளுவாய்
2 . வானம் பொழிய பூமி விளையும் வளமும் பொங்குமே வலமே வரும் ஒளியால் சோலை மலரும் எங்குமே ( 2 ) எந்தன் உணவாய் நீ வந்தாலே இன்பம் தங்குமே ! உந்தன் அருளை விதைத்தால் இந்த உலகம் உய்யுமே