செல்வோம் செல்வோம்
selvom selvom
செல்வோம் செல்வோம் வீரரே ஜெயவேந்தன் தீரனே
சீரடைந்து பாரில் மக்கள் நேரிடையாக நேர்மையுடன் தீவிரமாக தியாகத்தின் சொல்வீர் நீர் சேவை செய்ய - செல்
1. பாரும் பரன் கைப்பணி - பாதாளத்திலாகுதே பாதை காட்டும் மேய்ப்பனின்றி - ஆத்துமாக்களலையுதே பகரும் சுவிசேஷம் பாய்ந்து - செல்லும் வீரரே - சொல்
2. நரர் வினா பெருகுதே - நாச புரம் நெருங்காதே நாட்கள் தோறும் செடியில் நில்லா - கொடிகள் யாவும் உலருது நாணுதே சிருஷ்டியும் - நசரேயன் பேர் செல்லும் - செல்
3. விருந்து சாலை பாருமே - இருந்துண்போரைக் காணோம் வீதிகளில் அலைந்து நிற்போர் - வீட்டில் விரையச் செய்யும் நிரம்பவே சாலையும் - தீவிரம் செல்லும் வீரரே - செல்
4. கேட்டின் மகன் கூட்டத்தை - கூட்டுவோமன்பருக்கே ஆட்டுக்குட்டியானவரின் - சாட்சியை கூறிடுவோம் கட்டும் அரைக் கச்சையதை - கையிலெடுக்கும் பட்டயத்தை - செல்
5. ஆத்துமாக்கள் சேர்க்க இரத்தம் - சிந்திடப் பின்னடையோம் ஆத்துமா சரீரம் ஆவி - பாத்திரர்க்கு அளித்துமே தத்தமுடன் இத்தினமே - சத்தியத்தை சாற்றிடுவோம் - சொல்
6. பேயை நசுக்குவோம் - பதுங்கிட்டாலும் பயப்படோம் ஏதேனில் ஏவைமாதை - ஏய்த்தவனைத் துரத்துவோம் ஏற்றுவோம் ஜெயக்கொடி - இயேசுவின் நாமத்தில் செல்லுவோம்-செல்