சீயோனிசம் அரண்
seeyonisam aran
1. சீயோனிசம் அரண் சீயோனிசம் கோட்டையும் சீயோனெம் ராஜாவின் நகரமே சென்றதில் சேர்ந்திடும் நாட்களும் தூரமோ அன்று பிதாவுடன் நின்றிடுவோம்
லட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்கள் ஆட்சியர் இயேசுவுடன் - இதோ புதியதோர் பாட்டுடன் சீயோன் கிரிதனில் ஜோதியாய் வீற்றிடுவார்
2. இல்லையே வாயினில் ஏதுமே வஞ்சனை நல்லதோர் நற்பலனானவரே சொல்லரும் ஸ்தானமாம் சீயோனாம் அம்மலை செல்லவே நித்தமும் நயந்தவர் - லட்
3. ஒப்பற்ற பிதாவின் அற்புத பண்புகள் தப்பற தம்மில் கொண்டவரே சிப்பமாய் சேவையில் ஜீவனை பானமாய் எப்போதும் ஊற்றியே மறைந்தவர் - லட்
4. கோதுமை மணி போல் வித்திட்ட ஜீவனை மேதினியில் யாவும் வெறுத்தவர் தாதன் த்ரூபம் கண்டு களித்துமே பாதமே சேவிப்பார் நீடுழியாய் - லட்
5. சீயோனின் கோபுரம் கொத்தளங்கள் எல்லாம் சென்று நாம் சுற்றியுலாவிடுவோம் சர்வ வல்ல தேவன் பாலனம் செய்திடும் சாற்றுதற்கரிய பொன்புரியே - லட்