சீயோனின் நாதம் முழங்கவே
seeyonin naadham muzhangavae
1. சீயோனின் நாதம் முழங்கவே சீயோனின் ராஜா வருகின்றார்
அல்லேலுயா - 2 மகிழ் கொண்டாடி பாடிடுவோம்
அல்லேலுயா - 2 காண்போம் நம் இயேசுவையே
2. கண்ணீர் கவலைகள் வேதனைகள் கர்த்தரைக் கண்டிட ஒழிந்தடுமே
நீங்கிடும் இகமதின் பாடுகளே நித்திய மகிமையை ஈந்திடுமே
3. மண்ணதில் ஜீவனை மாய்த்த சுத்தர் பொன்னைப் போல் புடமிடப்பட்டவரே
விண்ணின் சாயல் நித்தம் தரித்தவராய் இயேசுவின் பொன்முகம் கண்டிடுவார்
4. தேகத்தில் பாடுகள் வென்ற சுத்தர் ஏகமாய் மறுருபமாயிடுவார்
யுகாயுகம் இயேசுவோடாளவே மேகமீதில் வேகம் பறந்திடுவார்
5. ஜெயங்கொண்டோர் சாலேமின் வீதிகளில் ஜெயத்தொனி கீதங்கள் முழக்கிடுவார்
மகிமையின் கிரீடங்கள் சூடினோராய் மகிமாசனத்திலே வீற்றிடுவார்
6. சீயோனின் நற்பணி தீர்ந்திடவே மகிமையின் கர்த்தரே வெளிப்படுவார்
ஆமென் கர்த்தாவே நீர் வாரும் என்போம் ஆவலாய் இயேசுவை சந்திப்போமே