சீயோனின் மணாளனே
seeyonin manaalanae
சீயோனின் மணாளனே வாரீரோ என் சிறுமை தீரீரோ
1.தீயோனின் தீயம்புகள் தினமும் என்னைத் தாக்குவதால் - திடனற்றேனே நீயேன் கலங்குகிறாய் என்று தேற்ற தூயோனே வந்திடுவாய் - (2)
2.கன்னியாம் எந்தனுக்கு அந்நியர் தொல்லையுண்டு - அகிலமதில் சென்னிறத்தோனே உந்தன் - திருமுகத்தை என்னிதயத்தில் கொண்டேன் - (2)
3.தேசங்கள் கொந்தளித்து தோஷங்கள் பெருகினவே பாருக்குள்ளே மோசங்கள் சூழ்ந்து உந்தன் தாசர்களை நாசப்படுத்துவதால் - (2)
4.அன்பு குறைந்திடுதே அகிலாசை நிறைந்திடுதே அடியவரில் முன்பு நீர் மொழிந்ததுபோல் விசுவாசத்தை இன்று காண்பதும் அரிது - (2)
5.தாரகை போன்ற சுத்தர் - தரையில் வீழ்ந்து மயங்குகிறார் - தாரணியில் தீரராய் நின்ற வீரர் தீரமற்றோராய் தூரமாய்ப் பின் போகிறார் - (2)
6.நிந்தை அவமானங்கள் சேர்ந்த பல சோதனையால் நெருக்கப்பட்டேன் எந்தையே வந்திடீரோ எந்தனது சிந்தை சிதையுமுன்பே - (2)
7.ஸ்தலம் இன்னும் எந்தனுக்காய் ஸ்தாபிதம் ஆகலையோ - தந்தை வீட்டில் நலமாய் நான் பிரவேசிக்கும் நாளுமெப்போ பல நாளாய் வாஞ்சை இதே - (2)
8.எக்காளம் கேட்டிடாதோ என் ஆவல் தீர்ந்திடாதோ இன்பநாதா அக்காலம் நோக்கி நோக்கி என் ஆத்துமா இக்காலம் சோருதையா - (2)