சீயோனிலே கண்டிடும்
seeyonilae kandidum
1. சீயோனிலே கண்டிடும் திவ்ய கோபுரம் அரண்களை எண்ணெய் சுற்றி உலா உவந்தே வருவோம் சாற்ற பின் சந்ததிக்கே
சீயோனே! வடிவுள்ள சீயோனே! சோபிதமாய் ஜொலித்திடுதே திருபிதாவின் குணசீலங்கள் சேர்ந்திடுவோம் என்றதிலே நின்றிட வென்றும் சீயோனே! வடிவுள்ள சீயோனே!
2. தேவன் உயர்கோட்டையாய் உன்னில் வேதம் ஒளியுமாக திகழ கேதமில்லா பொன் முகந்தனையே மோதத்தால் முத்திடுவோம்
3. ஊரிலொன்றும் வம்சத்தில் இருவர் நேர்ந்தே தெரிந்து கொள்ளப்பட்டவர் பாரினின்றும் மனுஷரிலிருந்தும் முற்பலன் ஆனோர் இவர்
4. ஆட்டுக்குட்டி இயேசுவின் பின்னே ஆசித்தலைந்த சித்தர் பாதங்கள் ஆட்சி செய்ய நின்றிலங்கிடுதே ஆர்ப்போடு சீயோனிலே
5. இன்னான் இன்னான் வந்துன்னில் பிறந்தோர் என்றுன்னில் தொகை எழுதிடுவார் இன்சீயோனில் பாலனம் புரிய தன்மாட்சி தந்திடுவார்