சீயோனில் வசிக்கும்
seeyonil vasikkum
1. சீயோனில் வசிக்கும் உன்னதனே துதி உந்தன் புகலிடமே சீயோனின் வாசல் உம் வாஞ்சையதே துதி என்றும் செய்திடுவேன்
நொறுங்கி நருங்கும் உள்ளத்தை தள்ளீரே உகந்ததாம் பலியதுவே. நொறுங்கி நருங்கி வந்திடும் என்னையும் ஆற்றியே தேற்றிடுவீர்
2. மோசேயின் கூடார மறைவில் மகிமையாய் வந்தவரே மகிமையாய் என்னிலும் வந்திடுமே மறுரூபமாக்கிடவே - நொறுங்கி
3. துன்பத்துக்கீடாய் என் மீந்த நாட்கள் இன்பமாய் மாற்றிடுமே ஜீவிய நாளெல்லாம் மகிழ்ந்திடவே கிருபையாம் நிறைத்திடுமே- நொறுங்கி
4. சிலுவையின் உன்னத மறைவினிலே இனிய என் புகலிடமே சோகத்தில் சேர்ந்திடும் வேளையிலும் சிலுவை என் தஞ்சமதே - நொறுங்கி
சீயோனில் மகிமையும் காத்திடுதே சீர்மிகும் சுத்தருக்காய் சீக்கிரம் வந்து என்னைச் சேர்த்திடும் என்றென்றும் சேவிக்க - நொறுங்கி