சீயோனில் தூயனாய்
seeyonil thooyanaay
1. சீயோனில் தூயனாய் உம்முடன் நின்றிடவா சீயோனின் ராஜாவே எம்மையும் அழைத்தீரே தூய பிதாவின் முகம் என்றும் தரிசிக்க . தூயதோர் சேவையும் எமக்கும் அளித்தீரே
சீயோனிலே ஆனந்தமாய் ஜெய கீதம் பாடி நிற்போம் ஆட்டுக்குட்டியும் எம் இயேசுவின் ஏகமாய் ஊழியரை இலட்சத்து நாற்பத்து நாலாயிரர் ஆளுகை செய்திடுவோம்
2. தாயின் வயிற்றில் எம்மையும் பிரித்தெடுத்து தாதைக்காய் முதற்பலனாகவே மாற்றினீரே தாயகம் தனையும் வெறுத்திட செய்துமே தூய சுதன் உமக்காகவே மீட்டெடுத்தார்
3. ஜீவனை பலியாய் இம்மண்ணில் காத்திடவே ஜீவனின் ராஜாவே எமக்கும் துணையானீர் சீயோனின் பாதையில் சிலுவை சுமந்து ஜீவகிரீடம் பெறவும் வாக்குரைத்தீர்
4. சீயோனில் பிறந்து பூவினில் அண்ணகராய் சீலமாய் சேவையில் நிற்கவும் வரமளித்தால் சீயோனின் மூலைக்கல் உம்முடன் இசைத்து ஜீவனாம் உம் அன்பின் நகரம் பணிவார்
5. பிதாவின் சிந்தையில் என்றும் எம் இயேசுவைப் போல் பிதாக்களாகவே உம் அன்பால் மாற்றினீர் தூய நகரமாம் சீயோனாய் விளங்கி தூயராய் இயேசுவோடென்றுமே ஆட்சி செய்வோம்