சீயோனில் கர்த்தர் ஆள்வார்
seeyonil karthar aalvaar
1. சீயோனில் கர்த்தர் ஆள்வார் மகிழ்வோம் நாமெல்லாம் சேர்வோம் நாம் கிருபாசனம் மகிழ்ந்தார்ப்பரிப்போம் சீயோனில் கர்த்தர் ஆள்வார் புகழ் துதி கேட்போம் வேந்தர் முழங்கால் முடங்க ராஜ மேன்மையுண்டாம்.
2. சீயோனில் கர்த்தர் ஆள்வார் அவர் போல் தேவன் யார்? ஆழ்கடல் அவர் கையின்கீழ் பேராழியும் ஆள்வார் முடிசூட்டி நாமம் போற்றும் அவர் கொடி ஓங்கும் நீர் சூழ் மா ஆழத்தில் தீவும் மீட்பின் ஆற்றல் பெறும்
3. சீயோனில் கர்த்தர் ஆள்வார் காலம் நேசர் சொந்தம் தேவாலயப் ப்ரகாரத்தில் இன்ப கீத வாழ்த்தல் ராயர் கொடிக் கீழ் வணங்கும் உயிர்கள் எல்லாம் கர்த்தர் விண்மண் எல்லாம் ராஜா மேன்முடி சூட்டுவோம்.