சீயோனே உன் தேவனைப்பாடு
seeyonae un devanaippaadu
சீயோனே உன் தேவனைப்பாடு சங்கீதம் நீ இனிதாய் பாடு கர்த்தன் இயேசு உந்தன் வாழ்வினில் வல்லமை தந்திடும் - நல்ல துருகமும் அரணுமவர்
வரம் தந்த கரம் பற்றுவோம் ஜெபத்தில் நாம் நிதம் நாடுவோம் மலைகள் உந்தன் வழியில் - சிறு கிளைகள் போலே அகலும் - உன் பாதை எங்கும் செழுமை பொங்கிடும்
அசைவாடும் தேவன் இவர் இசைபாடி தினம் வாழ்த்துவோம் சொல்லும் வார்த்தை வெல்லும் கல் நெஞ்சங்கள் உருகும் - நம் வல்ல தேவன் என்றும் தஞ்சமே
மார்ந்தர்க்கு ஜீவன் தரும் மெய் அன்பின் சிகரம் இவர் உலகின் ஒளியாம் இயேசு உண்மை வழியும் இயேசு - தம் சத்திய வசனம் என்றும் மாறாதே