சீயோனே சீயோனே
seeyonae seeyonae
சீயோனே சீயோனே ஜெகதலம் நின்றும் மனிதரில் நின்றும் முதற்பலனால் மீட்கப் பட்டனையே
1. பெருவெள்ளத் திரைச்சல் போல் வல்லமையுடனே பலத்த இடி முழக்கம் போல ஜெயத்தெனியே பரமண்டல மெல்லாம் கேட்டதிசயிக்கும் சுர மண்டலத்தின் ஓசை இதுதானோ - இன்ப - சீ யோ
2. கரையேது மில்லை கற்புடைமையினாலே கபடும் உன் அதரங்கள் அறிந்ததில்லையே களங்கமில்லா தேவ சிங்காசனம் முன்பு கன மகிமையோடேனின் றிலங்குகிறாய் - என்றும் - சீயோ
3. வல்லமையாளர் செங்கோல் உன்னிலிருந்தல்லவோ வசித்திட அவரின் தலமும் நீ அல்லவோ வானவர் சிந்தனை உந்தன் மனதில் வரைந்ததாலே வள்ள பிதாவின் முகம் காண்கிறேன் - சதா - சீயோ
4. ஆதி அப்போஸ்தல துாதுகளால் பரண் வேத முன்னால் நின்று விளங்கி வந்திடுதே சீயோனே உனது சிறப்பினை வெறுத்த தீயோர்கள் நானும் நாள் நெருங்கிடுதே - வேகம் - சீயோ
5. உன்னத தேவன் உயர் பெலன் கொள்வோரின் அகமதில் வகுத்தாரே உன் பெரும் வழிகள் சீயோனே உனது பாட்டாலே முடி சூட்டிடுவாய் இயேசு நாயகனை - பாடி - சீயோ