சீயோனே சர்வ பூமியின்
seeyonae sarva poomiyin
சீயோனே! சர்வ பூமியின் மகிழ்ச்சியும் நீயே உன்னத தேவனே உந்தன் உயிர் அடைக்கலம் -- உன்னில் என்று நான் ஏகிடுவேன்!
1. ஆட்டுக்குட்டியின் பின்சென்றவர் சித்தமே ஆதரையதில் செய்தவர் மீட்கப்பட்டவராய் புவிஜனத்தினின்றும் மகிழ்ந்துன்னில் சேர்ந்திடுவார்
2. உந்தன் நிமித்தம் வந்ததாம் பாடுகள் நிந்தை துயரம் யாவுமே விந்தையாய் கேட்குதே புதியதோர் நாதமாய் சந்ததமாய் உன்னிலே
3. அண்ணகராய் இயக்கம் சத்தியம தின் நல் அரண்களை ஜீவித்தவரே உத்தம ஸ்தானமும் நித்திய கீர்த்தியும் பெற்றுன்னில் இலங்கிடுவார்
4. சிந்தையில் சுத்தராய் மாந்தரின் மத்தியில் தந்தையாய் திகழ்ந்தவரே ஒங்கும் நின் சிகரமதிலென்றுமாகவே ஒப்பற்ற ஆட்சி செய்வார்
5. சொல்லரும் சீயோனே! உந்தன் மேல் வாஞ்சையாய் சொந்தமாய் கொள்ள உன்னையே சிறுமையடைந்துமே சிலுவை சுமந்துமே சுத்தரும் ஏங்குகிறார்