சீயோனே நீ விழித்தெழும்பிடுவா
seeyonae nee vizhithezhumbiduvaa
சீயோனே! நீ விழித்தெழும்பிடுவாய் சாலேமின் ராஜா இதோ வருவதால்
சீல குணமுள்ள அன்பின் தயாளன் ஆகாயம் மீதில் எழுந்திதோ வாரார்!
1. பூமண்டலங்கள் கிடுகலங்கிடுதே வான மண்டலங்களும் நடுங்கிடுதே பாசமில்லா உம் மானிடர் பூவில் பயந்தங்குமிங்கும் ஓடுவதாலே
2. கொலுமண்டபங்கள் திகிலடைந்திடுதே கொடிய செயல்களும் தோன்றிடுதே உதவியற்ற நின் உத்தமர் தவிப்பை உந்தன் கரத்தால் தீர்த்திடுமிப்போ
3. மாய உலகம் வெறுத்து விட்டால் நீ மாட்சி தங்கிய நகர் சேரலாமா மகிமையின் சாயல் அணிந்தவராய் நாம் மணவாளனோடு ஏகிடுவோமே,
4. பலவிதத் துன்பங்கள் நிறைந்துமே வருதே காரிருள் நாட்களும் நெருங்கிடுதே அந்தகாரப் பிரபு வெளியாகுமுன்னே, சந்தோஷ ராஜ்யத்தில் சேர்ந்திடலாம் நாம்
5. திருச்சபையே! உன் தீபங்கள் எல்லாம் சூரியப் பிரபையாய்த் திலங்கட்டுமே! மகிமையின் இரத்தத்துடன் உதித்திடும் போது மணவாளனுடன் நாம் மறுரூபமாவோம்!