சீயோனே நீ எழும்பிப் பிரகாசி
seeyonae nee ezhumbip piragaasi
சீயோனே! நீ எழும்பிப் பிரகாசி சாலேம் ராஜன் இதோ வருகிறாரே.
மேகங்களுடனே கண் யாவும் காண மகிமைக்குள் உன்னை அவர் வந்து சேர்ப்பார்.
1. பகற் காலங்களெல்லாம் அணைந்தணைந்து போய் இராக் காலங்கள் தான் அடுத் தடுத்தே சடுதியாய் பூவினில் வந்து கொண்டிருக்க ஜாதிகள் யாவும் தத்தளிக்குதே.
2. சேனைப் பலத்தால் ராஜ்யங்கள் ஆயினும் தினந் தினமாகத் தகர்ந்திடுதே சேனை சக்தியில் ஒன்றுமே இல்லை ஆவியின் பலத்தால் ஜெயங் கொள்ள வேணும்.
3. முடிவு காலத்தின் முடிவு வருமுன் முத்தூது எங்கும் முழங்கணுமே பின் மாரி பெற்று பிரயாசங் கொண்டு பிரபுக்களையும் பிடித் திழுக்கணும்.
4. திருச் சபையே! உன் தீபங்கள் எல்லாம் சூர்ய ப்ராகாசம் போல் இலங்கிடட்டும் மகிமையாய் வானத்தில் எழும்பி வருகையில் மணவாளனோடு நாம் மருரூபமாவோம்.