சீயோன் சேனையே
seeyon senaiyae
1. சீயோன் சேனையே விழித்திடுங்கள்.... போர் புரிந்து ஜெயம் பெற்றுக் கிரீடம் சூடிட
கேட்டிடுவோம் எக்காள சத்தத்தை நாம் போய் விடுவோம் இந்த உலகம் விட்டு மகிமையின் சீயோனுக்கே [2]
2. சர்வாயுதத்தை தரித்திடுங்கள் சாத்தானோடு யுத்தம் செய்து வெற்றியடைய
3. கிறிஸ்தேசுவுக்காய் பாடு சகித்தோர் நித்திய நித்திய காலமாக சீயோனில் வாழ்வார்
4. மோட்சானந்தமே சமாதானமே மன்னனோடு வாழும் காலம் பேரானந்தமே
5. மண்ணாசை என்னில் வெறுத்திடுதே விண்ணுலகில் காண்பேன் எந்தன் நேசர் பொன்முகம்
6. அல்லேலூயா முழங்கிடுங்கள் வல்ல இயேசு ராஜனைநாம் வானில் சந்திக்க