சீயோன் பாதையில் செல்லுகின்ற
seeyon paadhaiyil sellugindra
சீயோன் பாதையில் செல்லுகின்ற இயேசுவின் போர்வீரரே இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம் இருண்ட இவ்வுலகினிலே
சேனையின் அதிபன் சர்வவல்ல இயேசுவே சுவிசேஷத்தின் கொடியேற்றியே சாற்றுவோம் அவர் சத்தியமே
தேவன் ஈந்த சர்வாயுதமே தேவை இப்போர் முனையில் சாத்தானின் சேனையும் நடுங்கிடவே சந்தோஷித்தே மகிழ்ந்திடுவோம்
ஸ்தோத்திர தொனியுமே முழங்கிடுவோம் யுத்தத்தில் போர் வீரரே இயேசுவின் நிந்தைகள் சுமப்பவரே இப்போரில் ஜெயம் பெறுவார்
லோக சிற்றின்பம் நமக்கினியேன் தியாகத்தின் பாதையிலே இரத்த சாட்சியின் ஆவியோடே சுவிசேஷப் படையெடுப்போம்