சீயோன் மணவாளன்
seeyon manavaalan
சீயோன் மணவாளன் நேசர் இயேசு ராஜன் தூய மணாளிக்காய் மேகங்கள் மேல வருவார்
வானில் ஆனந்தமாய் எக்காளம் தொனிக்கவே பாரில் ஜெயமாக ஜிவித்தோர் ஏகிடுவார்
ஆவியின் கண்களால் அன்பரை மாத்திரமே தரிசித்து நேசித்தோர் மேகத்தில் சேர்ந்திடுவார்
மான் போல வாஞ்சையாய் தாகமாய் சேவைக்காய் தியாகமாய் ஜீவனை ஈந்தவர் பறந்திடுவார்
ஜெபத்திலே விழிப்பாய் அகத்திலே களிப்பாய் ஏகுவோம் எதிர்கொண்டு ஏகனோடே இசைய
பாடுவோம் ஜெய கீதம் ஆளுவோம் என்றென்றும் ஆனந்தம் ஆனந்தம் சீயோனில் ஆனந்தம