சீயோன் மலையில்
seeyon malaiyil
சீயோன் மலையில் தேவ மகிமை எங்கும் வீசுதே சர்வ வல்ல தேவன் அரசாளுகின்றார்
1. பெருவெள்ளத்தில் இரைச்சலைப் போல் பலத்த இடி முழக்கங்களை போல் புதுப் பாட்டு தொனி அங்கு ஒலிக்கின்றதே மகிமைப் படுகின்றார் பரமபிதா - சீயோ
2. அங்கே மலைமேல் நிற்கின்றார் ஆட்டுக் குட்டி யானை வரும் அவரோடிணைந்து பிதா நாமம் நெற்றியில் அணிந்து நிற்கின்றார் பரிசுத்தர் கூட்டமே - சீயோ
3. வாயில் கபடம் இல்லை ஆடை தனில் குறையுமில்லை மானிடர் மத்தியில் முதல் பலனிவர்கள் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் - சீயோ
4. அருமை இயேசுவின் பின்னே அலைந்து நடந்த பாதங்கள் மலையின் மீதிலே நின்று ஜொலிக்கின்றது அவர்கள் அப்போஸ்தல் ஊழியரே - சீயோ
5. சர்வ பூமியின்! பயத்துடன் கேள் சத்திய சுவிசேஷத்தை நித்திய சந்தோஷம் நிறைவாய்ப் பெறவே நீயும் வந்திடுவாய் தருணமிதுவே - சீயோ