சீயோன் மலையதிலே
seeyon malaiyadhilae
சீயோன் மலையதிலே சிங்காரக் குன்றதிலே சிறப்புடன் நிற்கிறோர்கள் யாரோ? - தன் மீட்பரை சாற்றுவோர்கள் யாரோ? ஆட்டுக்குட்டிக்குமாய் அன்பர் செய்கைக்குமாய் ஓயாமல் போற்றுவோர்கள் தானே
களங்கமில்லாதோர்களாம் கர்த்தரின் பிள்ளைகளாம் காத்தருக்கேற்றோர்களாம் - அவர்கள் அன்பு எந்நாளும் அவர்மேலே கர்த்தர் வரவுக்காய் காத்திருப்போர்களே கற்புடையவர்களே பாரில்
ஆட்டுக்குட்டியின் பின்னே சென்றோர்தானிவர்களே அண்ணல் யேசுவின் சித்தம்தானே - எல் லாநாளும் செய்தோரிவர்களே சுத்தர்கள் பாதமே மலையதின் மீதிலே ஆ! ஆ! அதின்பமே வானில்
வாயிற் கபடமில்லை வஞ்சனை தானுமில்லை ஆடைப் பிரகாசமாயணிந்தோர்கள் - தங்கள் அன்பரின் ரத்தத்தில் தோய்த்தோர்கள் தன் தேவ நாமமே நெற்றியில் தோணுதே ஆ! அலங்காரமே ஆ! ஹா! ஹா!
பரலோகம் தானதிலே சென்றிடுவார்களே மன்னன் அழைக்கும் தொனியோடே - மிக மாண்புடன் வாழ்ந்திடுவார்களே வா என் திருச்சபையே என்பாரந்நாளிலே செல்லுவேன் நானுமே ஆ ! ஆமென்