சீயோன் ஆர்ப்பரி
seeyon aarppari
சீயோன்! ஆர்ப்பரி சிருஷ்டி கர்த்தர் உந்தன் சர்வ வல்ல தேவனை
சென்றதாம் பாதைகளிலே சேதமே யாதுமணுகா(து) கண்மணி போலக் காவல் செய்தோனை நன்றியுடன் பாடுவோம் - சீயோ
நீக்கினார் பாவப் பாரமே போக்கினார் சாபம் யாவுமே தாழ்த்தியே நீசக் கோலமதாகித் தன் ஜீவனை ஈந்தாரே - சீயோ
ஆதரவற்ற நேரத்தில் ஆறுதலில்லை வேளையில் அன்பாலணைத்து ஆறுதலீந்த அன்பனைப் போற்றிடுவோம் - சீயோ
நிந்தையில் சோதனையிலும் வந்ததாம் தொல்லைகளில் மாண்டவர் மாளாமல் எம்மை ஆண்டவர் ஆதரித்தார் - சீயோ