சீரில்லாத பாபிஷ்டரே
seerillaadha paabishtarae
1. சீரில்லாத பாபிஷ்டரே! ஜீவ ஊற்றின் ஜலத்தினால் பாவதோஷம் தீர்த்திடுமேயேசு பலியின் ரத்தத்தினால் நெறி தப்பிப் போவதினால் நிர்மூடனாம் நீசனானேன் மாசில்லாத ரத்தத்தினால் வெளேரென்று தூய்தாகுவேன்.
வெண்மை ஆகுவேன்! (2) மாசில்லாத ரத்தத்தினால் வெளேரென்று தூய்தாகுவேன்.
2. வான ராட்சிய நாயகரே தாழ்மை நீசக் கோலமானார் ஒப்பில்லாத மாநேசரே முட்க்ரீடம் சூட்டப்பட்டார் ரட்சை செய்தன ராதலால் நன்றி நினைத்தேயிருப்பேன் மாசில்லாத ரத்தத்தினால் வெளேரென்று தூய்தாகுவேன்.
3. குணம் சிந்தை தீயதெல்லாம் பக்தி சுத்த சூனியமே தீவினை ரத்தாம்பரமாம் சுத்தி செய்வார் ரூடவ்ண்டில்லையே அருள் வாக்கின் ஆறுதலால் யேசுவண்டை சேர்ந்திடுவேன் மாசில்லாத ரத்தத்தினால் வெளேரென்று தூய்தாகுவேன்.