சீர் இயேசு நாமம்
seer yesu naamam
சீர் இயேசு நாமம் அதிசய நாமம் ஏழையெனக்கின்ப நாமம்
1. எல்லா நாமத்திலும் மேலான நாமம் பக்தர் நிதம் வாழ்த்தும் நாமம்- எல்லா முழங்காலும் முடங்கிடச் செய்யும் வல்லவராம் இயேசு நாமம்
2. பாவ பரிகாரம் பாதகர்க்கு நல்க பாரிடத்தில் வந்த நாமம் பாவமற்ற ஜீவியத்தை மாதிரியாய் காட்டித்தந்த பாவம் தீர்க்கும் புண்ணிய நாமம்
3. நேற்றும் இன்றும் என்றும் மாறாத நாமம் சாற்றும் துதி ஏற்கும் நாமம் போற்றும் பக்தர் சபையில் அபிஷேகம் ஊற்றி பரிசுத்தமாக்கும் நாமம்
4. வியாதி துன்பம் நீங்க சாத்தான் நிதம் தோற்க இரத்தம் சிந்தி நின்ற நாமம் ஜீவ வார்த்தை தந்து ஜீவித்திட கிருபை அளித்திட்ட அன்பர் நாமம்
5.வானம் பூமியோடு பாதாளம் யாவும் வாழ்த்தி வணங்கும் நாமம் வானிலும் பூவிலுமுள்ள எல்லா அதிகாரத்தையும் கீழடக்கி வென்ற நாமம்
6.ஏக மனதோடு கூடுமிடமெங்கும் வந்து வரம் தங்கும் நாமம் மேகமீதில் தோன்றி வேகம் வந்து நம்மை பந்தமுற சேர்க்கும் நாமம்
உந்தன் தேவை யாவும் உவந்து நின்று நல்கும் உத்தமர் நல் இயேசு நாமம் எந்தன் இயேசு போல எங்கும் உண்டோ நண்பர் இல்லை இல்லை இயேசு நாமம்.