சீர் பெறாமல் திக்கில்லாமல் யேசுவண்டை
seer peraamal thikkillaamal yesuvandai
1. சீர் பெறாமல் திக்கில்லாமல் யேசுவண்டை சேருவேன் ஆவலோடும் ஆசையோடும் திருப்பாதம் அண்டுவேன்.
அண்டினேனே(2) ஆசீர்வாதம் தாருமே அண்டினேனே(2) ஆற்றித் தேற்றிக்காருமே.
2. தயவாக நேசமாக சீரைத் தந்து ரட்சிப்பீர் பாவத் தீங்கும் தூர நீங்கும் சர்வ சுத்தியாக்குவீர்.
3. குணம் மாற நெஞ்சும் ஆறப் பரவசமாகுவேன். வரும் லோக வாழ்வைச்சேர ஊழிகாலம் வாழுவேன்.
4. அருள் தாரும் பாதுகாரும் மறு மாசில்லாமலே வாழ்விலேயும் தாழ்விலேயும் தாங்கி வாரும் நாயனே.