சீக்கிரமாய் வருகிறேன் என்றுரைத்தீரே
seekkiramaay varugiren endruraitheerae
சீக்கிரமாய் வருகிறேன் என்றுரைத்தீரே ஆமென் இயேசுவே வாரும் மெய்யாகவே வருவேன் என்றுரைத்தீரே ஆமென் கர்த்தாவேவாரும்
ஆமென் இயேசுவே வாரும் ஆமென் கர்த்தாவேவாரும்
1. ஜெயங்கொள்ளுகிறவனாய் என்னை நிறுத்துமே ஜீவ விருட்ச கனியை புசிக்க தாருமே இரண்டாம் மரணத்தினாலே சேதப்படாமல் ஜீவ கிரீடம் எனக்கு நீர் தாருமே-2
2. ஜெயங்கொள்ளுகிறவனாய் என்னை நிறுத்துமே வெண்மையான குறி கல்லை கையில் தாருமே உம் புதிய நாமத்தை என் மேல் எழுதுமே மறைவான மன்னாவை புசிக்க தாருமே -2
3. ஜெயங்கொள்ளுகிறவனாய் என்னை நிறுத்துமே விடிவெள்ளி நட்சத்திரத்தை எனக்கு தாருமே வெண்மையான வஸ்திரம் தரிப்பித்திடுமே ஜாதிகளின் மீது அதிகாரம் தாருமே-2
4. ஜெயங்கொள்ளுகிறவனாய் என்னை நிறுத்துமே பிதா முன்பு என் பெயரை அறிக்கை செய்யுமே தேவனுடைய ஆலயத்தின் தூண் ஆக்குமே உம்மோடே உட்கார அருள் செய்யுமே-2