சீக்கிரம் வருவார்
seekkiram varuvaar
சீக்கிரம் வருவார் (2) இயேசு வந்திடுவார் ஆயத்தமாகு (2) இயேசு வந்திடுவார் எக்காளம் தொனிக்கும் இயேசு வானில் வருவார் (2)
1.அல்லேலூயா பாடும் திரள் கூட்டத்தார் ஆரவாரம் செய்துமே முழங்குவார் ஆனந்த கீதம் பாடுவார் ஆனந்த முழக்கம் முழங்குவார் ஆண்டவர் இயேசுவை வானில் சந்திப்போம்
2.தீ வட்டியில் எண்ணெயில்லா கூட்டத்தார் ஏங்கி, ஏங்கி,எங்கி,ஏங்கி அழுவார் ஆயத்தமுள்ள சுத்தர்கள் ஆனந்த கீதம் பாடுவார் ஆண்டவர் இயேசுவை வானில் சந்திப்போம்
3.தேவ சித்தம் செய்த பரிசுத்தர்கள் வலப்பக்கம் நின்றுமே முழங்குவார் ஆயத்தமில்லா கூட்டத்தார் அழுது அழுது புலம்புவார் ஆயத்தமாகு இயேசு வானில் வந்திடுவார்