சத்தியமும் வழியும்
sathiyamum vazhiyum
சத்தியமும் வழியும் ஜீவனும் தருகின்ற தேவனே நமஸ்காரம் உத்தமராக நம்மை வழிநடத்தும் நல்ல இயேசுவே நமஸ்காரம்
மனுமகன் அவதாரம் எடுத்து வந்தே உலகை காத்தவரே நமஸ்காரம் மனுமக்கள் துயர்களைய மாடிடைக் குடியில் வந்து பிறந்தவரே நமஸ்காரம்
கர்பத்திலே நம்மை தெரிந்துகொண்டே கருணை செய்தவரே நமஸ்காரம் வெட்கத்தினாலே நாம் தலை குனியாவண்ணம் மீட்டவரே நமஸ்காரம்
சிலுவை மரணத்தினால் தூய இரத்தம் சிந்தி காத்தவரே நமஸ்காரம் பரிசுத்தஆவி தந்து பாதுகாத்தே வழி நடத்துகிறீர் நமஸ்காரம்