சத்திய வேத புத்தகமே
sathiya vedha puthagamae
சத்திய வேத புத்தகமே நித்திய திரியேக கர்த்தன் அருளிச் செய்த
1. மத்தியஸ்தனைக் குற்றவாளிக்குக் காட்டும் வைத்தியனை நோயாளிக்குப் புகட்டும் இத்தரையோர்க்கொரு ரட்சிப்பை யூட்டும் இயேசு கிறிஸ்து நாமத்தைப் பாராட்டும்
2. ஆயிரமாயிரமான பொன் வெள்ளி அருமையைப் பார்க்கிலு மதிகம் விலையுள்ள தூயமறை உனக்கு ஒப்பாகச் சொல்ல தொல்லுலகில் ஒருநூலுண்டோ! அல்ல!
3. பிள்ளைகள் பெற்றோர்கள், புருஷர் மனைவிகள் பெலத்தோர் பெலவீனர் பேதைகள் ஞானிகள் செல்வ ரெளியோர்கள் தேசிகர் மன்னர்கள் ஜெகத்தி லனைவர்க்கும் ஜீவ வசனங்கள்
4. புத்தி போதகத்துக்குரிய நன்னூலே போதக ஆத்துமத்தின் போஜனப்பாலே பக்தி பரிவு நிறைப்பாச நீர்க்காலே பாவங்களைப் பிளக்க பாய்ந்திடும் வாளே
5. பாதைக்குரிய தீபமும் நீயாவாய் பரிதிக்கு மேற்படும் பலனைச் சொரிவாய் சோதனைகளை வெல்ல திடனைத் தருவாய் சுவிசேஷ மீந்து நீ தேற்றியே வருவாய்