சத்திய பாதையில் சுவிசேஷம் கூறி
sathiya paadhaiyil suvisesham koori
சத்திய பாதையில் சுவிசேஷம் கூறி சீராக செல்லும் இந்த பயணம் - நல்ல நித்திய ராஜ்யத்தின் மேன்மைகள் பாடி நலமாக செல்லும் இந்த பயணம் ( சந்தோஷமாக )
அலைமோதினாலும் மலை பெயர்ந்தாலும் அலையாமல் செல்லும் இந்த பயணம் நல் மேய்ப்பனாம் தேவன் நம் இயேசுநாதன் வல்லமை சூழ்ந்திடும் பயணம்
ஆனந்தகீதம் எந்நாளும் பாடி அல்லேலூயா சொல்லும் பயணம் - ஜெய விசுவாசம் நம்பிக்கை என்றுமே பெருக அன்போடு செல்லும் இந்த பயணம்