சர்வத்தையும் அன்பாய்
sarvathaiyum anbaay
1. சர்வத்தையும் அன்பாய் காப்பாற்றிடும் கர்த்தாவை அநேக நன்மையால் ஆட்கொண்ட நம் பிரானை இப்போது ஏகமாய் எல்லாரும் போற்றுவோம் மா நன்றி கூறியே சாஷ்டாங்கம் பண்ணுவோம்
2. தயாபரா என்றும் எம்மோடிருப்பீராக கடாட்சம் காண்பித்து மெய் வாழ்வை ரூடவ்வீராக மயங்கும் வேளையில் நேர்பாதை காட்டுவீர் இம்மை மறுமையில் எத்தீங்கும் நீக்குவீர்.
3. வானாதி வானத்தில் என்றென்றும் அரசாளும் திரித்துவ தெய்வத்தை விண்ணோர் மண்ணோர் எல்லாரும் இப்போதும் எப்போதும் ஆதியிற் போலவே புகழ்ந்து ஸ்தோத்திரம் செலுத்துவார்களே.