சர்வ வல்லவர் போற்றிப்
sarva vallavar potrip
1. சர்வ வல்லவர் போற்றிப் பாடுவோம் - நாம் போற்றிப் பாடுவோம் - நாம் இன்றும் என்றுமாய் சென்ற நாளெல்லாம் நம்மை காத்திட்டாரே சர்வ வல்லவர் துதித்திடுவோம்
எல்லாக் கனம் மகிமையும் அவர்க்கே நாம் செலுத்திடுவோம் நாம் செலுத்திடுவோம் எல்லா துதிக்கும் நல் பாத்திரரே நாமும் சேர்ந்து போற்றிடுவோம்
2. பாவம் பார்த்தால் இளைத்திருந்த என்னைப் பரன் தேடினீரோ என்னை தேற்றவே பூவில் எங்கும் காணாப் பேரின்ப இளைப்பாறுதல் பெற்றிட செய்தீர் - எல்லா
3. மாய உலகம் அன்பில் கொண்டிருந்த என்னை மா தயவால் மீட்டுக் கண்டெடுத்தார் மெல்கிசேதேக்கின் அபிஷேகத்தினால் எந்தன் உள்ளம் இளைப்பாறச் செய்தீர் - எல்லா
4. நிந்தை பரிகாசம் பாடு சகித்தோராய்ப் பாளயப் புறம்பே தள்ளப்பட்டோராய் நம் பிதாவின் சித்தம் செய்திடவே இளைப்பாறுதல் நமக்கீந்தனரே - எல்லா
5. யோர்தானை போல துன்பம் எதிர்த்தாலும் யோசுவாவின் தேவன் நம்மோடிருப்பதால் யோர்தானின் கற்கள் நின்றது போல் நிற்போம் இளைப்பாறித் தைரியமாய் - எல்லா
6. சீயோன் ராஜா வானில் வேகம் வருவதால் அல்லேலூயா பாடி ஆர்ப்பரிப்போமே அன்பர் இயேசு நேசர் நமக்காக ஆவலுடன் எதிர் நோக்கி நிற்கிறான் - எல்லா