சர்வ வல்ல நம் இயேசு தேவனை
sarva valla nam yesu devanai
சர்வ வல்ல நம் இயேசு தேவனை துதிபாடி போற்றி மகிழ்வோம் அவர் கிருபை இதுவரையிலும் அணைத்தன்பாய் நடத்தியே
1. உலகோர் பாவங்கள் பாரக்குருசில் தீர்த்திட பலியாய் முற்றும் ஈந்தார் தம்மையே பேரன்பர் இயேசுவின் பாதை சென்றிடுவோம்
2. தினமும் துதித்திட - தூய வழியில் நடந்திட மாநில மீதில் கானக வழியில் மாறிடா இயேசுவே பாதை காட்டுவார்
3. துன்பம் தொல்லைகள் - பிணி நோய்கள் சூழினும் அண்ணல் இயேசு அருகில் வந்து அன்பின் கரம் தாங்கி ஆறுதலளிப்பார்
4. வாழ்க்கை படகினில் - அலை மோதி அடிக்கையில் புயலை நீக்கி அமைதி அளிப்பார் தஞ்சம் ஈந்துதவும் நல் தாரகமுமாவார்
5. சீயோன் மலை மீது - நிற்கும் நேசர் இயேசுவின் திருமுகமதை சேவிப்போம் நாம் திரு சித்தம் செய்து என்றும் அவர் மகிழுவோம்