சர்வ வல்ல தேவனே எல்ஷடாய்
sarva valla devanae elshadaay
சர்வ வல்ல தேவனே எல்ஷடாய் எல் எலியோன் அபிஷேகியும் என்னை அபிஷேகியும் நான் சிரித்து சிரித்து வாழ நான் மகிழ்ந்து மகிழ்ந்து பாட நித்தம் போற்றிப் போற்றி துதிக்க கிருபை தாருமே,
1. ஒடுங்கின ஆவி வேண்டாம் துதியின் உடையை தாரும் ஆனந்த தைலத்தால் என்னை நிரப்புமே சாம்பலை சிங்காரமாய் துயரை ஆனந்தமாய் (2) மாற்றிடும் ஆவியால் என்னை நிரப்புமே
2. வெட்கம் தூக்கம் வேண்டாம் - நித்திய மகிழ்ச்சி தாரும் அபிஷேக மழையிலே என்னை நிரப்பும் இருளை வெளிச்சமாக்கும் தோல்வியை ஜெயமாக்கும் (2) வல்லமை தந்து என்னை பயன்படுத்திடுமே
3. சத்துரு கள்ளன் போல் நித்தம் நித்தம் வந்த போது ஆவியே வெள்ளம்போல் கொடியேற்றுமே கோணல் செவ்வையாகும் தாழ்வும் வாழ்வாகும் (2) அபிஷேக அக்கினியால் அனல் எழுப்பிடுமே