சர்வ பூமியின் மகிழ்ச்சியான
sarva poomiyin magizhcchiyaana
1. சர்வ பூமியின் மகிழ்ச்சியான சீயோனே! மகா ராஜனின் இன்ப நகரமே! பரிபூரண வடிவுள்ள சீயோனில் மகா தேவன் நித்தியம் பிரகாசிப்பார்
பரமண்டல கீதங்கள் தொனிக்கும் சுரமண்டல் ஓசையும் முழங்கும் பரலோக ராஜன் இயேசு வுடன் பரமானந்தம் சீயோனில் அடைந்திடுவோம்
2. மனத்தாழ்மையும் சாந்தத்தின் சொரூபியாய் மலையாம் சீயோன் மீதினில் இயேசுவே பரி பூரண அழகுள்ள சீயோனில் கிறிஸ்தேசு நித்தியம் பிரகாசிப்பார்
3. குருசை நித்தமும் சுமந்திட்ட சீஷரே குரு இயேசுவின் வழிகளைத் தொடர்ந்தவர் திருவடி தன் ஜெயித்திடும் தாசரே நிர்மலமாய் நித்தியம் பிரகாசிப்பார்
4. ஜீவ பலியாக மாய்ந்திட்ட சுத்தரே தேவ சேவையில் தந்தையராய் ஆனவரே தாதை நாமமே தரித்துமே சீயோனில் பரிசுத்தரே நித்தியம் பிரகாசிப்பார்
5. சீயோனின் ராஜானே சீக்கிரம் வந்துடுவார் சீயோன் சுதராய்க் கீர்த்தியைப் பெற்றிடுவோம் பரிபூரணம் இயேசுவின் முகம் கண்டு பூர்ண சுத்தராய் நித்தியம் பிரகாசிப்போம்