சர்க்கரை முத்தே சந்தன
sarkkarai muthe sandhana
சர்க்கரை முத்தே சந்தன பொட்டே கண்ணே கண்ணுறங்கு முத்தமிழ் சொத்தே முல்லை பூ மொட்டே கண்ணே கண்ணுறங்கு அன்னை மரியின் செல்வமே விண்ணக தேவ திலகமே கண்ணே நீயும் கண்ணுறங்கு ஆரிராரிரோ
கந்தையில் நீயும் மகிமை கண்டாய் கண்ணே கண்ணுறங்கு தந்தையின் அன்பை எமக்கு தந்தாய் கண்ணே கண்ணுறங்கு மந்தையின் ஆயர்கள் தோழமை கொண்டாய் கண்ணே கண்ணுறங்கு தென்றலும் மெல்லிய தேனிசை மீட்ட கண்ணே கண்ணுறங்கு