சரணாகதி சரணாகதி
saranaagadhi saranaagadhi
சரணாகதி சரணாகதி இயேசு நின் பாதமே சரணாகதி
பரலோக வாசனே பக்த்தரின் நேசனே பரமேஸ்வரன் பாதம் சரணாகதி சர்வத்தை ஆண்டிடும் சகலமும் உம் வசம் சர்வேஸ்வரன் பாதம் சரணாகதி
அன்பின் ஸ்வரூபனாய் அடியார்க் அடியனாய் அவதரித்த நின் பாதம் சரணாகதி குறைவினை அகற்றும் நிறைவினால் நிரப்பும் நிர்மலனே நின் பாதம் சரணாகதி
உலகத்தின் பாவத்தை அழித்திடும் பலியே கிருபாகரன் பாதம் சரணாகதி குருசினில் பலியாய் மரித்துயிர்த்தெழுந்தவா நித்யாதிபதி பாதம் சரணாகதி
வெண்மையும் சிவப்புமாய் சௌந்தர்யமானவா மணவாளன் நின் பாதம் சரணாகதி - திரு சபையாம் சரீரத்தை விடுவிக்க விரைந்திடும் நியாயாதிபதி பாதம் சரணாகதி