சங்கீதம் பாடி மகிழ்ந்திடுவோம்
sangeedham paadi magizhndhiduvom
சங்கீதம் பாடி மகிழ்ந்திடுவோம் சந்தோஷம் உண்டாக பாடிடுவோம்
தேவனின் ஜனமாய் துதித்திடுவோம் தேவாதி தேவனை பணிந்திடுவோம்
ஜீவனின் தேவனின் துதிகளையே ஜீவனுள்ள நாள்மட்டும் சொல்லி வருவோம் - சங்கீதம் (2)
ஆவியான தேவனை ஆராதிப்போம் ஆவியோடும் உண்மையோடும் தொழுதிடுவோன்
ஆட்டுக்குட்டியானவரின் நாமத்தையே ஆனந்தம் உண்டாக பாடிடுவோம்
பரிசுத்தவான்களின் சபையினிலே பரிசுத்த தேவனன்று உம்மை துதிப்போம்
பரிசுத்த ஆவியின் வல்லமையால் உம்மை பாடி பாடி துதித்திடுவோம் - சங்கீதம்