சந்தோஷமே ஆஹா சந்தோஷமே
sandhoshamae aahaa sandhoshamae
சந்தோஷமே ஆஹா சந்தோஷமே பரலோகத்தின் மஹா சந்தோஷமே சந்தோஷம் நிரப்பிடுதே என் உள்ளத்தை நிரப்பிடுதே
1. புசிப்பும் குடிப்புமல்ல பரலோக இராஜ்யம் பரிசுத்த ஆவியின் சந்தோஷம் பொன்னல்ல வெள்ளியல்ல எங்கள் ஆசை இயேசு கிறிஸ்துவின் சந்தோஷமே
2. சினிமா, களியாட்டு வேண்டாம் எமக்கு நேசரின் பிரசன்னம் சந்தோஷமே உள்ளத்தின் ஆழங்கள் எல்லாமே நிரப்பும் தெய்வீக சமூகத்தில் சந்தோஷமே
3. உலகத்தின் முடிவும் எம்மோடு இருப்பார் ஒருபோதும் ஒரு நாளும் விலகிடாரே ஆற்றியே தேற்றிடும் அன்பரின் அன்பு ஆனந்த கூத்தாட செய்திடுதே