சந்தோஷமாய் இயேசுவண்டை
sandhoshamaay yesuvandai
சந்தோஷமாய் இயேசுவண்டை ஓடிவா நீ ஓ! பாவியே - இந்நேரமே
1. ஆவலுடன் மேவிடுமே - ஆனந்தம் ராஜன் இயேசு மீட்பார் வருந்தி அழைக்கிறார் உன்னையே - சந்
2. சஞ்சலத்தால் நெஞ்சம் நொந்து - தோழனே தாங்கிடுவார் தயவுடன் தருண மீதுதான் வாராயோ - சந்
3. பாவ உலகம் மாயமாம் - நம்பாதே பாவம் நீங்க பாரிலே இயேசுவைப் போல் யாருமே இல்லையே - சந்
4. பாவம் அவர் தோளில் அன்று - சுமந்தார் பாவமும் உன் ரோகமும் சாபமும் அகற்றியே நீக்கினார் - சந்
5. எப்போ திரும்புவாய் என்றவர் - ஏங்குகிறார் காத்திடவே கருணையால் கரங்கள் விரித்தவர் நிற்கிறார் - சந்
6. அழிவின் பாதை விரைந்தே ஏகும் - மைந்தன் ஜீவ பாதை சேர்ந்திட உருகிய மனதாய் அழைக்கிறார் - சந்
7. வாஞ்சையுடன் வந்திடாயோ - நண்பனே மோட்ச இன்பம் பெற்றுமே நீடூழி காலம் வாழ்வாய் - சந்