சந்தோஷமான நல் நகரம்
sandhoshamaana nal nagaram
சந்தோஷமான நல் நகரம் சாந்த சுகர்ந்த நல் தேசம் சர்வ விசுவாசிகளும் இயேசுவைப் பணியும் சகல சிருஷ்டிகரின் கவனம்
காலங்கள் மாறும் கவலைகள் தீரும் வானவர் இயேசு வந்திடுவார் கஷ்டங்கள் எல்லாம் நீங்கிடுமே கண்ணீரும் லாபமாய் மாறும் ஸ்துதி கீதம் பாடி புகழ்வோம் புதிதொரு எருசலேம் நாட்டில் பொன் நகர் பயணம் பின் ராஜாவாம் இயேசு நீதியின் சூரியன் முன் வாழ்வோம்
அன்பினால் அவர் செய்த நன்மைகள் கண்டே அகமெல்லாம் நன்றியால் நிறைந்தேன் பாவத்தில் நின்றென்னை மீட்டெடுக்க அவர் கல்வாரி குருசினில் மாண்டார் ஸ்துதி கீதம் பாடி புகழ்வோம் புதிதொரு எருசலேம் நாட்டில் பொன் நகர் பயணம் பின் ராஜாவாம் இயேசு நீதியின் சூரியன் முன் வாழ்வோம்