சந்தோஷம் சமாதானம் ஆனந்தம் பேரின்பம்
sandhosham samaadhaanam aanandham perinbam
சந்தோஷம் சமாதானம் ஆனந்தம் பேரின்பம் அப்பா உம் சமுகத்திலே
அற்புதம் அதிசயம் ஆறுதல் நம்பிக்கை அப்பா உம் பிரசன்னத்திலே - 2
ஆராதனை ஆராதனை யேகோவா தேவனே ஆராதனை - 2 ஆராதனை ஆராதனை எந்நாளும் ஆராதனை - 2
பிள்ளையானேன் சொந்தமானேன் அப்பா என்றழைக்கும் உரிமை பெற்றேன் - 2 சுதந்தரவாளியாய் மாற்றப்பட்டே என்றும் நான் உம் சொந்தமே - 2
தோல்வியில்லை வெட்கமில்லை யேகோவா நிசி என்னோடு உண்டே - 2 உம்மாலே சேனைக்குள் பாய்ந்திடுவேன் என் வாழ்வின் ஜெயக்கொடி நீர் - 2
சோர்ந்திடேனே நான் கலங்கிடேனே எல்ஷடாய் தெய்வம் என் சுதந்தரமே - 2 சகலத்தையும் செய்ய வல்லவரே உம்மை நான் ஆராதிப்பேன் - 2