சந்தோஷ வெள்ளத்தில் மிதக்கிறேன்
sandhosha vellathil midhakkiren
சந்தோஷ வெள்ளத்தில் மிதக்கிறேன் ஆடலும், பாடலும் எனக்கு தந்தீரே ஆனந்த மழையில் நனைகிறேன் -2 கவலை எல்லாம் மறந்து விட்டேன் உந்தன் பாதத்தில்
1. தாவீதைப் போல மகிழ்ந்திடுவேன் சங்கீத கீர்த்தனம் பாடி ஆடுவேன் வெட்கங்கள் நீங்கி துதித்திடுவேன் கெம்பீர சத்தமாய் ஆராதிப்பேன்
ஆராதனை ஆராதனை இயேசுவின் பாதத்தில் ஆராதனை அல்லேலூயா அல்லேலூயா இயேசுவின் பாதத்தில் அல்லேலூயா
2. ஆராதனை அழகில் என்னை மறப்பேன் மகிழ்ச்சியின் மதகுகள் திறக்கின்றது அக்கினி அபிஷேகம் அனல் மூட்டும் ஆவியின் வரங்கள் என்னை நிரப்பும் அபிஷேகம் அபிஷேகம் இயேசுவின் பாதத்தில் ஆராதனை ஆவியில் நான் நம்பிடுவேன் இயேசுவின் பாதத்தில் நிரம்பிடுவேன்
3. துக்கத்தில் இனிமேல் துவழ்வதில்லை வேதனை இனிமேல் வருவதில்லை வியாதியில் இனிமேல் வாழ்வதில்லை வெட்கத்தில் இனிமேல் நடப்பதில்லை துக்கமில்லை துயரமில்லை இயேசுவின் பாதத்தில் நிம்மதி தானே கண்ணீர் இல்ல கவலை இல்ல இயேசுவின் பாதத்தில் ஆறுதல் தானே.