சமஸ்த மண்டலத்தையும்
samastha mandalathaiyum
1. சமஸ்த மண்டலத்தையும் படைத்த நாதனே சமஸ்த ஜீவ கோடியும் போஷிக்கும் தேவனே.
2. உம்மாலே நாங்கள் இம்மட்டும் ஜீவித்து வாழ்கிறோம் ஊண் உடை சுகம் பெலமும் உம்மால் அடைகிறோம்.
3. இதை அறிந்தும் வீணராய் நடந்து சீர் கெட்டோம் உம் நன்மை உணராதோராய் உம் தண்டனை பெற்றோம்.
4. பருவ காலத்தில் மழை பெய்யாமல் போயிற்று இப்போது பஞ்சம் எங்களை நெருக்குகின்றது.
5. இரக்கமுள்ள தேவனே மா துன்பம் அடைந்தோம் பஞ்சம் நிவிர்த்தி செய்யவே பணிந்து கேட்கிறோம்.
6. அருள் பொழிந்து மாரியை கர்த்தாவே சொரியும் அதால் உம் திவ்ய நாமத்தை அன்பாகப் போற்றுவோம்.