சக்தியானவா ஜீவநாயகா
sakthiyaanavaa jeevanaayagaa
சக்தியானவா ஜீவநாயகா அன்பாலே வாழும் தேவா ? ஆதி அந்தமாய் அருள் நீதி உண்மையாய் என்றென்றும் வாழும் தேவா
மக்கள் யாவரும் அன்பில் அக்களிக்க வா அக்களிக்க வா அன்பில் அக்களிக்க வா அச்சமின்றியே வாழ்வில் ஒத்துழைக்க வா ஒத்துழைக்க வா வாழ்வில் ஒத்துழைக்க வா திக்கனைத்துமே உண்மை எதிரொலிக்க வா !
எதிரொலிக்க வா உண்மை எதிரொலிக்க வா யுத்தம் நீக்கியே அமைதி உதிக்கச் செய்ய வா உதிக்கச் செய்ய வா அமைதி உதிக்கச் செய்ய வா பூமி எங்குமே நெஞ்சம் யாவும் தங்கியே அன்பாலே வாழும் தேவா